Song : பூவுக்கெல்லாம் சிறகு
Film : உயிரோடு உயிராக
Singers : ஸ்ரீநிவாஸ்
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(பூவுக்கெல்லாம் ...)
நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
i love you, love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம் ...)
ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது
i love you, love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்து விட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம் ...)
Leveraging the Universe
2 months ago
0 comments